வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 அக்டோபர், 2011

கொள்ளுபிட்டி விபசார விடுதி தொடர்பாக 'மெடம் ஜீனா' உட்பட ஐவருக்கு குற்றப்பத்திரம்


கொள்ளுப்பிட்டியில் உள்ள நவீன சந்தைக் கட்டிடமொன்றில் நடத்தப்பட்ட விபசார விடுதியின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் மெடம் ஜீனா என்பவருக்கும் இவ்விபசார விடுதியை நடத்துவதில் அவருக்கு உதவிய ஏனைய நால்வருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சந்தேக நபரான 'மெடம் ஜீனா' என அழைக்கப்படும் ரோஸ்மேரி பெரேரா மற்றும், மேர்வின் பெரேரா, சுமித் குமார, கருணாரட்ன, தினேஸ் சம்பத் குமார, மல்லவராச்சிகே ரிக்கி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் 61 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நவீன சந்தைக்கட்டிடத்தில் விபசார நிலையமொன்றை அமைத்தமை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியமை, விபசார விடுதியை நடத்த உதவியமை ஆகியன இவர்கள் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’