வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினர் அல்லர்: ஜனாதிபதி

மிழர்களும் முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்களும் சிறுபான்மையினர் அல்லர் எனவும் இலங்கை ஓர் ஐக்கியப்பட்ட நாடு எனவும் அவர்களை நம்பச் செய்வதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலனா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் தற்போதை பிரதான இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளர்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஒரு நாடு என்ற எண்ணக்கருவுக்காக எவருக்கும் கப்பமோ நாட்டின் ஒரு பகுதியையோ வழங்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இணங்கவில்லை. மீண்டும் தலைதூக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு இரையாகாமல் இருப்பதற்கான வலியுமையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’