கிறீஸ் பூதம் இன்று வருகிறது' என கையடக்கத் தொலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி அனுப்பியதான சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி சந்தேக நபரால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினைப் பெற்றுக்கொண்ட நபரொருவரால் பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு விடுக்கப்பட்ட தகவலை அடுத்து மேற்படி நபர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜீவரத்னம் ஜீவகாந்தன் என்பவரே
இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இன்றைய தினம் மேற்படி நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் ரொஹான் ஜயவர்தன உத்தரவிட்டுள்ளார். (Amadoru Amarajeewa)
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’