வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தடுத்து வைத்திருப்பவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா

வசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையை இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரியுள்ளது. இல்லாவிடின் அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்; இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்றாலும் கூட தொடர்ச்சியாக அதன் கண்காணிப்பில் ஈடுபடுவோம். இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் சமூக மயப்படுத்தப்பட்டதை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். __

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’