வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

யாழில் இன்றுமுதல் இரவுநேர பொலிஸ் ரோந்து: சமன் சிஹேர

யா ழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று முதல் இரவு ஆறு மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை நடமாடும் பொலிஸ் சேவையை நடத்தவுள்ளதோடு பொலிஸார் துவிச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுமுள்ளனர் என யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்படி கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... மர்ம மனிதன் என்று யாரும் இல்லை. உங்களுக்குள் இருக்கும் ஒரு மனிதனாக அவன் இருக்கலாம். பொதுமக்கள் ஓடுகிறவர்களைத் துரத்துகிறார்கள். அத்தோடு குழுக்களாக சென்று கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். சட்டத்தை கையில் மக்கள் எடுத்தால் நாங்கள் பாத்துக் கொண்டு இருக்கமாட்டோம் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நல்ல தொடர்புகள் இருக்கின்றன. மர்ம மனிதனை யாரும் கண்டால் பொலிஸாருக்கு அறியத்தாருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் எக்காரணம் கொண்டும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு உங்களுக்கு பாதுகாப்பு அரணாக வருகின்ற பொலிஸாரை தாக்க வேண்டாம். தாக்கினால் எம்மைப் பாதுகாப்பதற்காக நாங்கள் உங்களைத் தாக்க வேண்டி வரும் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன். யாழ். மக்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் விளிப்புக் குழுக்களையும் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஒன்றையும் அமைக்கவுள்ளோம். யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று முதல் இரவு ஆறு மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை நடமாடும் பொலிஸ் சேவையை நடத்தவுள்ளதோடு பொலிஸார் துவிச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுமுள்ளனர் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’