வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 செப்டம்பர், 2011

எமது தேவைகளை பிளேக்கிற்கு விளங்கப்படுத்தினோம்: சம்பந்தன்

தெ ற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் ரொபேட் ஓ பிளேக்குடனான சந்திப்பில் எம்மக்களின் தேவைகள் பற்றி மிகவும் திருப்திகரமாக கலந்துரையாடினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான எமது சந்திப்பு 8.15வரை தொடர்ந்தது. இச்சந்திப்பில் என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார். ரொபேட் ஓ பிளேக்குடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றீஸியா மற்றும் அரசியல் செயலாளர் போல் காட்டர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களுடனான சந்திப்பில் எமது தேவைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் கதைத்தோம். குறிப்பாக மனித உரிமை விடயங்கள், மனிதாபிமான நடவடிக்கைகள், எதிர்கால தேவைகள், அரசியல் தீர்வு போன்ற பல விடயங்கள் பற்றி விரிவாக உரையாடினோம். எமது கலந்துரையாடல் மிகவும் திருப்திகரமாக அமைந்தது. எமது ஆதங்கங்களையும் வேண்டுகோளையும் நல்லமுறையில் பிளேக் செவிமடுத்தார் என்று சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’