வெ ளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி திருமலையிலிருந்த ஒரு சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்ட நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார்.
தெஹிவளை கவ்டானாவைச் சேர்ந்த ஹுசைன் மொஹமட் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
16 வயதுக்குட்பட்ட இச்சிறுமிக்கு மத்தியக் கிழக்கு நாடொன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தாக்குவதாகக் கூறியும் கடவுச்சீட்டைபெற்றுத் தருவதாகக் கூறியும் போலியான வாக்குறுதிகளை வழங்கி அவரை திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
எனினும் சந்தேக நபர் மேற்படி சிறுமியை அழைத்துவந்து கொழும்பில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
விசாரணைகள் முடிவடையாததால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’