வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

யாழ் வாழ்வியல் பொருட்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை யாழ்ப்பாண வாழ்வியல் எனும் தலைப்பிலான பொருட்காட்சியொன்றை நடத்தவுள்ளது
குறித்த தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பல்கலைக்கழகத்தின் கலை பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த பொருட்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்கவும் விசேட அதிதியாக யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் போரசிரியர் வசந்தி அரசரட்ணமும் கலந்துகொள்ளவுள்ளனர். குடாநாட்டின் புராதன குடிகள் புராதன குடியிருப்புகள் வாழ்வியல் முறைமைகள் குடிப்பரம்பல் ஆகியவற்றிற்கு இயன்றளவில் உள்ள தொல்லியல் சான்றுகள் மற்றும் தடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பொருட்காட்சி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது குடாநாட்டின் தொன்மை பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் சின்னங்கள் பொருட்களாகவும் மாதிரிகளாகவும் புகைப்படங்களாகவும் கால வரிசை கிரமத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. பல்கலைக்கழக அரும்பொருட் காட்சிச்சாலையில் உள்ள அரிய தொல்லியல் பொருட்களும் குடாநாட்டின் பல பாகங்களுக்கு நேரில் சென்று பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களும் பொதுமக்களால் மனமுவந்து அன்பளிப்பு செய்யப்பட்ட மற்றும் இரவலாக வழங்கப்பட்ட பொருட்களுடன் இன்னும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களும் கண்காட்சியில் உள்ளடக்கப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கண்காட்சி நடைபெறும் போது ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது. இதற்கென இந்தியாவிலிருந்து நான்கு தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களான பேராசிரியர் இராஜன் பேராசிரியர் செல்வகுமார் பேராசிரியர் அதியமான் மற்றும் கலாநிதி இராஜகோபால் ஆகியோருடன் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து 15க்கும் மேற்பட்ட அறிஞர்களும் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’