வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சவூதி இளவரசர் பெண் ஒருவரை போதையூட்டி வல்லுறவுக்குட்படுத்திய வழக்கு புத்துயிர் பெறுகின்றது

வூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது.
சவூதி இளவரசரான அல் வாலிட் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லையென்ற காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கினை கடந்த வருடம் நிறைவு செய்தது. எனினும் தற்போது அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படியும் இளவரசரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள இளவரசரின் பேச்சாளர் இது முற்று முழுதான பொய்யெனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறித்த காலப்பகுதியில் அங்கு இருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார். சவூதி இளவரசரான அல் வாலிட் உலகில் 26 ஆவது மிகப்பெரும் பணக்காரராகவும், அரபு நாடுகளின் பெரும் பணக்கார நபராகவும் கருதப்படுவதோடு இவரது சொத்து மதிப்பு 19.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’