வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

குற்றம் சுமத்தப்பட்ட நபர் 11 வருடகால வழக்கு விசாரணையின்பின் விடுதலை

யுதங்களையும் வெடிமருந்துகளையும் கொன்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 2000 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுக்கப்பட்ட நபர் ஒருவரை 11 வருடங்களின்பின் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.
சந்திரகுமார் ரொபர்ட் புஷ்பராஜ் எனும் நபருக்கு எதிரான வழக்கு கொழும்பிலும் நீர்கொழும்பிலும் பல நீதவான்கள் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் 11 வருடங்களாக விசாரிகக்ப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ, சந்தேக நபரை நேற்று விடுதலை செய்தார். இச்சந்தேக நபர் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி சுனில் ராஜபக்ஷ தனது தீர்ப்பில் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதல்ல எனவும், சமர்ப்பிக்கப்பட்ட பொருட்கள் குற்றம் சுமத்தப்பட்ட நபர் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த வழக்குத்தொடுநர் தரப்பு தவறிவிட்டது எனவும் நீதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’