வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 17 செப்டம்பர், 2011

சர்வதேச விசாரணைக்கு எதிரான துருப்புச் சீட்டாக நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு பயன்படுத்துகிறது: மன்னிப்புச் சபை

போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு எதிரான பிரசாரத்திற்கான துருப்புச் சீட்டாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏறழத்தாழ இரு வருடங்களாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த ஆணைக்குழு அடிப்படையில் குறைபாடுகளைக் கொண்டது எனவும் அட்டூழியக்காரர்களுக்கு தொடர்பான பொறுப்புடைமையை அது வழங்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இணையத்தளத்தில் அச்சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஸரிபி, இது தொடர்பாக கூறுகையில், "இலங்கை அரசாங்கம் ஏறழத்தாழ கடந்த இரு வருடங்களாக, நல்லிணக்க ஆணைக்குழுவை சர்வதேச விசாரணைக்கு எதிரான பிரசாரத்திற்கான துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வருகிறது. அது நம்பகமான பொறுப்புடைமை பொறிமுறை எனவும், நீதியை வழங்குவதுடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியும் என அதிகரிகள் குறிப்பிடுகின்றனர். யதார்த்தத்தில், அது ஆணை, தொகுப்பு, மற்றும் நடைமுறை என ஒவ்வொரு மட்டத்திலும் குறைபாடுகளைக் கொண்டது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான ஆணையானது இத்தகைய விசாரணையொன்றுக்குத் தேவையான சர்வதேச தராதரத்திற்குரிய அளவை விட மிக குறைவானது" எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’