வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 செப்டம்பர், 2011

மக்கள் பதற்ற நிலையிலிருக்கும் பகுதிகளுக்கு அமைச்சர் இன்றிரவு சைக்கிளில் பயணம்!

ண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் பீதி மற்றும் பதற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் வாழும் சில பகுதிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றிரவு (5) சைக்கிளில் பயணஞ் செய்து அவ்வப் பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
யாழ் ஸ்ரான்லி வீதியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் அவர்கள் நாவாந்துறை சூரியவெளி கொட்டடி பண்ணை வண்ணார்பண்ணை சின்னக்கடை குருநகர் போன்ற பகுதிகளுக்கு சென்றிருந்தார். அமைச்சர் அவர்களுடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’