கடந்த கால யுத்த சூழலால் முழுமையாக சேதமடைந்த குருநகர் கடற்கரையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயம் தற்போது மீளப் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பாhவையிட்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) கடந்த கால யுத்தத்தால் குருநகர் கடற்கரையில் அமையப் பெற்றிருந்த அன்னை வேளாங்கன்னி ஆலயமும் முழுமையாகச் சேதமடைந்திருந்தது.
இந்நிலையில் மக்களின் பங்களிப்புடன் அவ்வாலயம் மீள் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நேற்றைய தினம் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அவ்வாலயத்தைப் பார்வையிட்டார்.
அத்துடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் கலந்துரையாடினர். குறிப்பாக கிறீஸ் மனிதன் தொடர்பாகவும் அதன் உண்மை தன்மை தொடர்பாகவும் அமைச்சர் அவர்கள் அந்த மக்களிடம் விளக்கினார்.
இதன் போது அமைச்சர் அவர்களுடன் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’