வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சமூக விரோதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் நடவடிக்கைகள்

க்களின் அமைதியை சீர்குலைக்கும் மர்ம மனிதர்களை மக்களது முழுமையான ஒத்துழைப்பின் மூலமே இனங்கண்டு கொள்ள முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) யாழ் மாவட்டத்தில் நிவி வரும் மர்ம மனிதர் விவகாரம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைய நாட்களாக குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சமூட்டக் கூடிய வகையிலும் பதட்ட மூட்டக் கூடிய வகையிலும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையிலும் நிகழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டு வருகின்ற நிலையிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய கடந்த 6ம் திகதி உயர்மட்ட மாநாடொன்று மாவட்ட செயலகத்தில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பிரசன்னத்துடன் நடாத்தப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் மட்டுமல்லாது பிரதேச கிராம மட்டங்களில் அந்தந்த பிரதேச செயலர் கிராம சேவையாளர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரிகளை உள்ளடங்கியதாக விழிப்புக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இவை தொடர்பில் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடும் போது மக்களின் அமைதி வாழ்வையும் இயல்பு வாழ்க்கையும் கருத்தில் கொண்டு உண்மைத் தன்மையோடு செய்திகளை வெளியிட வேண்டும். மர்ம மனிதர் தொடர்பிலான உண்மை நிலையினைக் கண்டறிவதற்கு மக்களது முழுமையான ஒத்துழைப்பே முக்கியமானது எனவும் மர்ம மனிதர் என்பது சமூக விரோதிகளின் திட்டமிட்ட செயற்பாடே என்றும் மர்ம மனிதன் தொடர்பில் வெளிவந்த சில பத்திரிகைச் செய்திகளையும் சுட்டிக் காட்டியதுடன் அரசுக்கும் மர்ம மனிதனுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லையெனவும் மர்ம மனிதர் கிறீஸ் பூதம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை மேலும் மேலுதி பீதிக்குள்ளாக்காமல் இதனை சமூக விரோதிகளின் செயற்பாடுகள் எனக் கூறுவதே காலப் பொருத்தமானதாகும் எனவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மேலதிக அரச அதிபர் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’