வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 செப்டம்பர், 2011

நியாயமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறுவதை நிறுத்த வேண்டும்: ஜெனீவாவில் இலங்கை

நியாயமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறுவதை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது. "நாம் உருவாக்கும் புதிய இலங்கைக்கு விரோதமான சில குழுக்கள் அல்லது தனிநபர்களினால் நியாயமற்ற உரத்த பிரசாரங்கள் மீண்டும் மீண்மும் இடம்பெறுகின்றன. நாம் எம்மிடமுள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி தாக்குவோம்" என அவர் கூறினார். "நாம் பெருமளவு முன்னேற்றமடைந்துள்ளோம் என்பதையும் எமது அனைத்து நண்பர்களுடனும் திறநத் மனதுடனும் பரஸ்பர மதிப்புடனும் இணைந்து செயற்படுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்பதையும் நியாயமான எண்ணம் கொண்ட எந்த நபரும் ஏற்றுக்கொள்வர். இவற்றுக்கான பதிலுபகாரமாக எமது நல்லெண்ணத்தை நிரூபிப்பதற்குகான வாய்ப்பை வழங்குமாறு நாம் கோருகிறோம்" எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’