வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இரண்டு இராணுவத்தினர் மக்களால் வலிகாமம் மேற்கில் மடக்கிப் பிடிப்பு

லிகாமம் மேற்குப் பகுதியில் கிறீஸ் மனிதர்கள் எனப்படுவோரின் நடமாட்டம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். நேற்றிரவு கிறீஸ் மனிதனைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை தடுக்க முற்பட்டதாகக் கூறப்படும் இரண்டு இராணுவத்தினரை மக்கள் பணயமாக பிடித்து அடைத்து வைத்திருந்துள்ளனர்.
இதையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நிலவிய முறுகலின் மத்தியில் மேலதிகமாகக் குவிக்கப்பட்ட படையினர் பணயமாக பிடிக்கப்பட்ட படையினரை மீட்டு தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் வலிகாமம் மேற்கு தொல்புரம் பாணாவெட்டிப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்ட வேளை அப்பகுதியில் இரு மர்மமனிதர்கள் நடமாடியுள்ளனர்.அவர்களைக்கண்ட பொது மக்கள் சந்தேகத்தில் அவர்களை பிடிப்பதற்காகத் துரத்திச்சென்ற வேளை அவர்கள் தப்பித்துள்ளனர். அதேவேளை அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்த இராணுவத்தினர் இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மர்மமாக நட மாடியுள்ளனர். அத்துடன் திரண்டிருந்த பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு குவிந்த பொது மக்கள் இரண்டு இராணுவத்தினரையும் வீடொன்றினுள் வைத்துப்பூட்டியுள்ளனர். அத்துடன் அவர்களை விடுவிக்கவும் மறுத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு மேலதிகமாக பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறைப் பிடிக்கப்பட்டவர்களை மீட்டுக்கொண்டு செல்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த படை அதிகாரிகள் மக்களுடனான வாக்குவாதத்தின் பின்னர் தம்முடன் படையினரை மீட்டு அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவங்களில் முன்னின்று செயற்பட்டவர்களெனக் கூறி எழுவரைக் கைது செய்துமுள்ளனர். அவ்வாறு பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மக்கள் நள்ளிரவு தாண்டியும் அங்கு குவிந்து நின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டு கோளின் பேரில் அங்கு விஜயம் செய்துள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் போராட்டக்காரருடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிந்திய செய்திகளின்படி கைது செய்யப்பட்ட எழுவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வலிகாமத்தின் அராலி தெற்கு,மேற்கு உள்ளிட்ட சில பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்வதாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேசசபை தவிசாளர் வீட்டிற்கும் மர்ம மனிதர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’