வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

பின்லேடன் கொலை: சிதைவடைந்த அமெரிக்க விமானத்தினை பார்வையிட சீனாவிற்கு அனுமதியளித்த பாகிஸ்தான்? _


பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, சேதமடைந்த அமெரிக்க ஹெலிகொப்டரை பரிசோதிக்க சீன பொறியியலாளருக்கு பாகிஸ்தான் அனுமதியளித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த மே மாதம் 2ஆம் திகதி, பாகிஸ்தானின் அபோதாபாத்தில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்கு அமெரிக்க நேவி சீல் படை அங்கு பயணம் செய்திருந்தது. ராடார்களின் கண்களில் சிக்காமல் பாகிஸ்தானில் வந்திறங்கிய அவர்கள் 'ஸ்டீல்த்' தொழிநுட்பத்துடன் கூடிய ஹெலிகொப்டர்களைப் பயன் படுத்தியமை அதன் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இவர்கள் பின்லேடனை சுட்டுக் கொன்றதன் பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப முற்படுகையில் அவர்கள் வந்திறங்கிய ஹெலிகொப்டரில் ஒன்று பழுதடைந்ததைத் தொடர்ந்து அதனை குண்டு வீசி தகர்த்து விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் அவர்கள் விட்டுச் சென்ற அவ் விமானத்தின் சிதைவுகளைப் பரிசோதிக்கவும், படமெடுக்கவும் சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதியளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சிதைவடைந்த விமானத்தினை யாருக்கும் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் என அமெரிக்க சீ.ஐ.ஏ உளவுப்பிரிவு தெரிவித்திருந்த நிலையிலும் பாகிஸ்தான் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நட்புறவு நீடித்து வருகின்றது. பாகிஸ்தானின் பல துறைகளில் சீனா முதலிட்டுள்ளதுடன் அந்நாட்டிற்கான பாரிய ஆயுத வழங்குநராகவும் திகழ்கின்றது. ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு சற்று விரிசலடைந்திருந்தநிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலும் இருநாடுகளுக்கிடையிலான உறவை மேலும் விரிவடையச் செய்யலாம் எனக் கருத இடமுண்டு. தன்னிடம் அறிவிக்காமல் பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை அந்நாடு மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’