கச்சதீவில் இந்திய தேசிய கொடி ஏற்றுவதற்காக சென்றுகொண்டிருந்த 43 பேரை இன்று கைது செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா கச்சதீவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இந்து மக்கள்கட்சியைச் சேர்ந்த அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாதுரை உட்பட 43 பேர் கச்சதீவுக்குச் செல்வதற்காக தூத்துக்குடி மீன்பிடி இறங்குதுறைக்கு சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கச்சதீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். விரும்பத்தகாத சம்பவங்களை தடுப்பதற்காக அக்கடற்பகுதியில் இன்று மீன்பிடிப்பதற்கு இந்திய பொலிஸார் தடை விதித்திருந்தனர். ராமேஸ்வரத்தின் மண்டபம் பகுதியில் இன்று 2000 இற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’