இந்தியாவின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் ஆனால், ஊழலை எதிர்த்து செவ்வாயன்று போராட்டம் ஆரம்பிக்கவிருக்கும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் அவர் கடுமையான சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கிறார்.
பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான டெலிகொம் ஊழல், கடந்த வருடம் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கான ஒப்பந்தங்கள் குறித்த ஊழல் ஆகியவை தொடர்பில் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியமான தடையாக ஊழல்கள்தான் திகழ்வதாகக் கூறிய மன்மோஹன் சிங் அவர்கள், ஊழலை ஒழிக்க தன்னால் ஆன அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன் என்றும் கூறினார்.இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியமான தடையாக ஊழல்கள்தான்
திகழ்வதாகக் கூறிய மன்மோஹன் சிங் அவர்கள், ஊழலை ஒழிக்க தன்னால் ஆன அனைத்து
நடவடிக்கையும் எடுப்பேன் என்றும் கூறினார்.
அதேவேளை, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கும் சிவில் உரிமை அமைப்புக்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் மூலம் மாத்திரமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி சிவில் உரிமைச் செயயற்பாட்டாளரான அன்னா ஹசாரே அவர்கள்,
செவ்வாய்க்கிழமை முதல் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை
ஆரம்பிக்கவிருக்கிறார்.
ஊழல் ஒழிப்புக்கு எதிராக செயற்படுவதற்காக இந்திய மைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் லோக்பால் சட்டம் போதுமானது அல்ல என்று கூறி அதனைக் கண்டித்தே அன்னா ஹசாரே போராட்டம் நடத்தவிருக்கிறார்.
இந்தப் போராட்டம் நடத்துவற்கு அனுமதி வழங்குவதற்கு 22 நிபந்தனைகளை விதித்துள்ள அரசாங்கம் , அந்தப் போராட்டம் மூன்று நாட்களில் முடித்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்பார்த்தது.
ஆனால், அந்த நிபந்தனைகளுக்கு போராட்டக்காரர்கள் ஒப்புக்கொள்ளாததால், போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக டில்லிச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த இது போன்ற போராட்டத்தால் நாடெங்கிலும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு பெருகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதேவேளை, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கும் சிவில் உரிமை அமைப்புக்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் மூலம் மாத்திரமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஊழல் ஒழிப்புக்கு எதிராக செயற்படுவதற்காக இந்திய மைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் லோக்பால் சட்டம் போதுமானது அல்ல என்று கூறி அதனைக் கண்டித்தே அன்னா ஹசாரே போராட்டம் நடத்தவிருக்கிறார்.
இந்தப் போராட்டம் நடத்துவற்கு அனுமதி வழங்குவதற்கு 22 நிபந்தனைகளை விதித்துள்ள அரசாங்கம் , அந்தப் போராட்டம் மூன்று நாட்களில் முடித்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்பார்த்தது.
ஆனால், அந்த நிபந்தனைகளுக்கு போராட்டக்காரர்கள் ஒப்புக்கொள்ளாததால், போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக டில்லிச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த இது போன்ற போராட்டத்தால் நாடெங்கிலும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு பெருகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’