ஆ யுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த தொலைநோக்கும் தலைமைத்துவமும், நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை அடைந்துகொள்வதற்கும் வழிவகுக்கும் என நாம் நம்புகின்றோம்'' என தனது சுதந்திர தின செய்தியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா கூறிள்ளார்.
இலங்கை அரசு தலைமை, வடமாகான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறிய அவர் இந்தியாவின் ஒற்றுமைக்கு, ஜனநாயகத்தின் மீது அது கொண்டுள்ள ஈடுபாடு, பன்மைத் தன்மை, சமய, மொழி, இன கலாசார பல வகைமை என்பவையே காரணமென என சுட்டிக் காட்டினார்.
சமத்துவம் மக்களின் கௌரவம் என்பவற்றை உறுதி செய்யும் சமூகத்தை உருவாக்கவும், கடந்த காலத்தின் ரணங்களை சுகப்படுத்தவும் இலங்கை கொண்டுள்ள லட்சியத்திற்கு இந்தியா ஆதரவு வழங்கும் என அவர் கூறினார்.
இலங்கையின் ஒருமைத் தன்மை, இறைமை, மற்றும் தேச ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்தின் மூலம் நிரந்தர சமாதானத்திற்கும் இந்தியா உறுதியாக ஆதரவு வழங்குமெனவும் அவர் உறுதியள்ளித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’