தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதன், மர்ம மனிதன் என்கின்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டு குறித்த சில பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலை சில அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை மீண்டும் பீதியில் உறையச் செய்து வருகிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், "நாடெங்கிலும் பல பாகங்களிலும் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. நாட்டின் சகல பாகங்களுக்கும் எந்நேரத்திலும் சென்று வரக்கூடிய சமாதான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனை குழப்புவதற்கான சதிமுயற்சிகளாக கூட இது இருக்கலாம். உண்மையில் பார்த்தால் கடந்த ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதனால் முற்று முழுதாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு சன நடமாட்டம் குறைவடைந்து இராணுவ வீரர்கள் தெருக்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்களும் எழுகின்றன. இதனை முதலில் கட்டுப்படுத்தி பூரண தெளிவுபடுத்தலை ஏற்படுத்தி சமாதான நிலையினை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் முதலில் முன்வரவேண்டும். கடந்த சனிக்கிழமை நாவற்குடா என்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவம். அதாவது, வெளியூரிலுள்ள ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டைச் சரிவர அடையாளம் காணமுடியாததால் அயலில் உள்ள ஒருவரிடம் விசாரித்திருக்கிறார். அவரை கிரிஸ் மனிதன் எனச் சந்தேகித்து அயலவர் கடுமையாகத் தாக்கி கம்பத்திலும் கட்டி வைத்திருக்கின்றார்கள். இதனை அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு, ஒரு கலவரமாகவே மாறியிருக்கின்றது. குறித்த சம்பவம் அவ்விடத்தில் நடைபெற்றிருக்கும் போது அங்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மீண்டும் அங்கொரு முறுவல் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றார். அதாவது உண்மை நிலை என்னவென்று அறியாது, அவர் குறித்த நபரைத் தாக்கியது சரி என வாதிட்டுப் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கின்றார். எதுவுமே அறியாத ஒரு அப்பாவி தாக்கப்பட்டிருக்கின்றார். அதனை விசாரிக்காமல் அரசியல் இலாபம் தேடுவதற்கு அவர் முனைந்திருக்கிறார். எனவே இயல்பு வாழ்க்கையை எவரும் குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’