இலங்கையில் பிரிவினைவாத போராட்டம் காரணமாக ஆதிவாசிகளின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும்
நடைபெற்ற ஆதிவாசிகளின் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆதிவாசிகள் வாழும் 52 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கிழக்கு மாகாணத்தில் சில கரையோரக் கிராமங்களில் ஏற்கனவே ஆதிவாசிகள் வாழ்ந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் ஆதிவாசிகளும் பெரும் பாதிப்புகளையும் கஷ்டங்களையும் இழப்புகளையும் எதிர்நோக்கியதாகவும் தனது உரையில் குறிப்பிட்ட அவர் தற்போது அப்படியான நிலைமை இல்லை என்றும் கூறினார்.
ஆதிவாசிகளின் கலாச்சாரம், மரபு உரிமைகள் ஆகியவற்றை பாதிக்காத வகையிலேயே அபிவிருத்தி நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் என்றும், இந்த ஒன்று கூடல் நிகழ்வு மூலம் காட்டு வேடுவர்களும், கரையோர வேடுவர்களும் ஐக்கியமாகியுள்ளதாகவும தனது உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’