வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பயங்கரவாத பட்டியலில் புலிகளை உள்ளடக்க, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை மீண்டும் விண்ணப்பம்

ரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் 07.12.2001 ஆம் திகதிய ஒழுங்குவிதிக்கு அமைய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவ்வொன்றியம் மீளமைத்து வருகிறது.
இதில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உள்ளடக்குவதற்காக பிரஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கூடாக இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவ்விண்ணப்பத்தில் இலங்கை அரசாங்கம் விபரித்துள்ளது.
2006 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்து வருகிறது.
பிரிட்டன் கடந்த 6 ஆம் திகதி தான் புதுப்பித்த, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உள்ளடக்கியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’