வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இலங்கை யுத்தக்குற்றவாளி கனடாவில் இல்லை

னடாவில் மறைந்து வாழ்ந்த 30 யுத்தக்குற்ற சந்தேக நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இலங்கை குத்துச்சண்டை வீரர் ஒருவர் இப்போது கனடாவில் இல்லையென கனேடிய எல்லை சேவை முகவரகம் அறிவித்துள்ளது.

விக்டோரியாவில் நடந்த 1994 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் பங்குபற்ற வந்த இளந்தாரி தேவாகே குலதுங்க முதலாவது போட்டியில் தோல்வி கண்ட பின் காணாமல் போய்விட்டார். ரொறன்ரோவில் இவர் இருப்பதை கண்டுபிடித்த கனேடிய அகதிகள் குடிவரவு சபை இவர், மனித குலத்துக்கு எதிராக குற்றங்களை அதாவது சித்திரவதை, பொதுமக்களை கொலை செய்தமை தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வருவதாக தெரிவித்தது.
எனினும் இலங்கையரான குலதுங்க கனடாவில் தற்போது இல்லை என கனேடிய எல்லை பாதுகாப்பு முகவரகம் கூறியதை கனேடிய அரசாங்கமும் உறுதி செய்துள்ளது.
கனேடிய சமஷ்டி அரசு ஜுலை 31 இல் 30 யுத்தக்குற்ற சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்டது.
கனடாவில் சட்டத்துக்கு மாறாக வாழ்வோருக்கு நாம் ஒரு செய்தியை உறுதியாக கூறுகின்றோம். இவர்களை கனடாவிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் நாம் பின்னடைய மாட்டோம்' என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’