மீளப் புனரமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் சிலை நிர்மாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றுகாலை சென்று பார்வையிட்டார். அமைச்சர் அவர்களுடன் சங்கிலியன் சிலையை 1974 ம் வருடம் முதன்முறையாக உருவாக்கிய சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் அவர்களும் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களும் உடனிருந்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்ற அமைச்சர் அவர்கள் ஆலயச் சூழலைப் பார்வையிட்டதுடன் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள புல்லுக்குளம் சுற்றுச் சூழலையும் பார்வையிட்டார்.
கலாசார நிலையம் அமையப் பெறவுள்ள நிலையில் இப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பண்டைய கலை இலக்கிய கலாசார விழுமியங்களைப் பறைசாற்றும் முகமான சிற்பங்கள் மற்றும் சகல துறைசார் முன்னோடிகளினதும் புகழ் பூத்தவர்களினதும் சிலைகள் அமைப்பது தொடர்பில் அமைச்சர் அவர்கள் ஆராய்ந்ததுடன் இதற்கான நடவடிக்கைகள் உடன் ஆரம்பிக்கப்படவுள்ளதையும் எடுத்துக் கூறினார்.
யாழ்.மத்திய கல்லூரி வளாகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்கல்லூரியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை ஞாபகமூட்டும் வகையில் அன்னார்களது உருவச் சிலைகளை கல்லூரி வளாகத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது அமைச்சர் அவர்களுடன் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா சொல்லின் செல்வர் இரா.செல்வடிவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’