மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களிடையே மர்ம மனிதன் என்ற பீதியை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே தூண்டி விட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருப்பது அரசியலில் அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி விநாயகமூர்த்தி முரளிதரன்
களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி ஆகிய பொலிஸ்
பிரிவுகளுக்கான சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் வெளியிட்ட இக்கருத்து
தொடர்பாக தமது அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ள மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும்
சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'மர்ம மனிதன் பீதி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக அச்சமும் பீதியும் நிறைந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதை அந்நேரத்தில் மக்களோடு மக்களாக இங்கு இருந்திருந்தால் இக்கருத்துக் கூறிய பிரதியமைச்சர் உண்மை நிலையை அறிந்திருப்பார்.
அந்நேரத்தில் மக்களோடு மக்களாக இங்கு இல்லாமல் இப்போது அச்சமும், பீதியும், பயமும் தணிந்து வருகின்ற நேரத்தில் இங்கு வந்து மக்களுக்கு ஏதோ கூறவேண்டும் என்பதற்காக மக்கள் முன் வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியிருப்பது அவரது அரசியல் நாகரீகமற்ற செயலாகும்.
'மர்ம மனிதர்கள் என்று கூறப்படுபவர்களை நேரடியாக கண்டவர்கள் எவரும் இல்லை. எல்லாம் வதந்தியாகும். இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தி மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்' என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருக்கிறார்.
அப்படியானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மர்ம மனிதனின் அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறியிருப்பது பொய்யா? மர்ம மனிதனை நேரடியாக கண்டு அவர்களை துரத்திச் செல்லும் போது அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும், இராணுவ முகாம்களிலும் புகுந்திருப்பதாக மண்டூர், புதூர், களுவன்கேணி, திகிலிவெட்டை, தாண்டியடி, குறிஞ்சாமுனை, ஈச்சந்தீவு, ஊறணி, கொக்கட்டிச்சோலை, துறைநீலாவணை, செங்கலடி, காத்தான்குடி உட்பட இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் கூறுவது வதந்தியா? அல்லது பிரதியமைச்சர் கூறுவது வதந்தியா? என்பதை மக்கள் நன்கு உணர்வார்கள்.
இதேவேளை சில நாட்களுக்கு முன்பு செங்கலடியில் பிரதியமைச்சர் அரச வங்கிக்கிளை ஒன்றின் திறப்பு விழாவில் உரையாற்றிய போது மர்ம மனிதன் என்று கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்தமைக்காக செங்கலடி பிரதேச இளைஞர்களை அவரே பாராட்டியதை அவர் மறந்து விட்டாரா?
மர்ம மனிதன் விவகாரத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே தூண்டினார்கள் என்றால், அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மட்டுமல்ல புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தூண்டியது யார்? இதற்கு பிரதியமைச்சர் அளிக்கும் பதில் என்ன?
மர்ம மனிதனின் நடவடிக்கைகளால் எமது மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இவர்களில் சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்கள். பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்கள். இவற்றை பிரதியமைச்சர் அறியவில்லையா? அறிந்தும் அறியாதது போல் நடிக்கின்றாரா?
தமிழ் பிரதேசங்களில் மர்ம மனிதன் பீதி காரணமாக உருவான அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டபோது பொதுமக்கள் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து எமக்கு கிடைத்த தகவலின் பேரில் நாம் அங்கு சென்று பொலிஸாருடனும், இராணுவத்தினருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அங்கு ஒரு சுமூக நிலையை ஏற்படுத்தி குறிப்பாக இளைஞர்களை அமைதி காக்குமாறு பகிரங்கமாக வேண்டினோம். இதனை பொலிஸ் மற்றும் இராணுவத் தரப்பினர் மட்டுமல்ல எமது மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள்.
இப்படியான நிலையில் பிரதியமைச்சர் எம்மீது அபாண்டமான முறையில் சேறுபூச முற்படுவது அவரது அரசியல் வங்குரோத்தை காட்டுவதாகவே எமக்கு தென்படுகின்றது.
இக்காலப்பகுதியில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமையினால் சில இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, துறைநீலாவணை, ஊறணி போன்ற இடங்களில் ஆண்கள், பெண்கள் என ஐம்பதுக்கு மேற்பட்டோர் பாதுகாப்பு படையினராலும், பொலிஸாராலும் தாக்கப்பட்டார்கள். இவர்களில் இருப்பத்தைந்துக்கும் மேற்பட்டோர் மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வந்தனர். இவர்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி அவர்களது உடனடித் தேவைகளையும் நாம் நிறைவேற்றினோம். இதனை அவர் அறிவாரா?
இதனைத் தவிர துறைநீலாவணையில் நான்கு பேரும், கொக்கட்டிச்சோலையில் ஆறு பேரும், தாண்டியடியில் பதினெட்டு பேரும், ஊறணியில் ஒன்பது பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருபத்தினான்கு மணி நேரத்திற்குள் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம். பிரதியமைச்சர் கூறியிருப்பது போல் அப்படியாரும் இப்போது விளக்க மறியலில் இல்லை. இந்த வேளையில் மனிதாபிமான ரீதியில் எமது வேண்டுகோளின் பேரில் இலவசமாக உதவிய சட்டத்தரணிகளை நாம் நன்றியுடன் நினைவு கொள்கின்றோம்.
எனவே பிரதியமைச்சர் முரளிதரன் உண்மை நிலையை அறிவதென்றால் மர்ம மனிதன் பீதி காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள், பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதல்களுக்கு இலக்கான பொதுமக்கள், மற்றும் பொலிஸாரால் கைதாகி பிணையில் விடுதலையான பொதுமக்கள் ஆகியோரை நேரில் சென்று சந்தித்தால் உண்மை நிலையை அவரால் அறிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்தால் இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் யார்? இருக்கின்றார் என்பதை அவர் அறிவார்;. அவர் இதுவரை அறிந்திருந்தாலும், அவருக்கு அது வதந்தியாகவே தெரியும்.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்; முழுப் பூசணிக்காயை சோற்றுக்கள் புதைத்து விட்டு எலும்பு இல்லாத நாக்கினால் எதையும் கதைக்கலாம் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவதூறாக கதைப்பதற்கு இவருக்கு எந்த விதத்திலும் அருகதை இல்லை என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் தெட்டத் தெளிவாக கூற விரும்புகின்றோம்.'

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’