நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு உங்களின் இறைமையைப் பிரயோகிப்பதாக இருக்கும், ஜனநாயகத்தின் சாரம் அதுவாகவே அமையும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழு வடிவினையும் இங்கே தரப்படுகிறது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுகின்றது. அதனை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் முக்கியமாக மூன்று பிரச்சினைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து தமிழ் குடும்பங்களும் அவர்கள் முன்னர் குடியிருந்த காணிகளில் முறையான வீடமைப்பு வசதிகளுடனும் போதுமான வாழ்வாதார வாய்ப்புக்களுடனும் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதும் அவர்கள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் இயல்பான வாழ்வுக்கு திரும்பி வாழ்வதை உறுதிப்படுத்தும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் முறையில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் அரசாங்கத்தின் இது தொடர்பான செயல்பாடுகள் ஏமாற்றம் தருவதாகவே அமைந்துள்ளன. இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை அர்த்தமுள்ள விதத்தில் மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தனது கடப்பாட்டைக் காட்டவில்லை. இப்பாரிய பணியை எல்லா அம்சங்களிலும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் கட்டமைப்புடன் கூடிய முறையான ஒருங்கிணைக்கப்பட்ட செயற்றிட்டம் ஒன்று இல்லை. முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டதைத்தவிர இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தரமான முன்னேற்றம் காணப்படவில்லை. யுத்தத்தில் அவர்க்குரிய சொந்தமானவை எல்லாம் அழிந்து போய்விட்டன. வீட்டு வசதி, வாழ்வாதார வாய்ப்புக்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்ட நிலையிலே அவர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எல்லாம் வெறும் பிரசாரமாகவே அமைந்துள்ளன. இம்மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக இந்தியாவினால் அன்பளிக்கப்பட்ட 500 ட்ராக்டர்கள் கையளிக்கப்பட்டமை தொடர்பான அரசாங்கத்தின் கபடத்தனமான செயல்பாடுகள், மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று அன்பளிப்பாக வழங்கிய லாண்ட்மாஸ்டர்களுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்வதில் காட்டப்பட்ட அரசியல் ரீதியான பாரபட்சம், இந்தியாவினால் அன்பளிக்கப்பட்ட 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் காரணங்களை முன்வைத்து காட்டப்படும் தாமதம் ஆகியன பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைக் கவனிப்பதில் அரசாங்கத்திற்கு இதயபூர்வமான அர்ப்பணிப்பு இல்லை என்பதையும் மலிவான அரசியல் லாபம் ஒன்றையே அது கொண்டுள்ளது என்பதையும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக உண்மையாக பாடுபட வேண்டும் என்பதிலலும் பார்க்க, அரசியல் லாபத்தை மாத்திரமே அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளது.
அரசாங்கத்தினதும் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடனும் இடம்பெறுகின்ற செயற்பாடுகளின் மூலம் இராணுவத் தேவைகளுக்கென்றும் அபிவிருத்தி என்ற போர்வையிலும் தமிழ் மக்கள் சட்டபூர்வமாக குடியிருந்த, விவசாயம் செய்த காணிகளிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதும் ஏனைய காணிகளை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதும் இடம்பெறுகின்றன. ஏனைய காணிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. புனித வணக்க ஸ்தலங்கள், மற்றும் தமிழ் மக்களின் கலாசாத்திற்குரிய பாரம்பரிய ஸ்தலங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன. சில இடங்களில் கலாசார அடையாளத்தைத் திரிபுபடுத்தும் விதத்தில் புதிதாக வணக்க அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் வைக்கப்படுகின்றன. இதனால் பிரதேசங்களின் புனிதத்தன்மை மாசுபடுத்தப்படுகின்றது. இவை யாவும் யுத்த்தின் பின்னர் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு பாரதூரமான இடரை ஏற்படுத்துவதாக அமைகின்றன. தமிழ் மக்கள் மீது ஆகக் கூடுதலான துன்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இந்நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் முன்னிருந்த நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான நல்லிணக்கம் உருவாக முடியும்.
தமிழ் மக்களின் சட்டபூர்வமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாiஷகளை பூர்த்தி செய்யக்கூடியதானதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்துடன் வாழக்கூடியதுமான பிரிபடாத, ஐக்கிய நாட்டின் வரையறைக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மோதல் போக்கில் ஈடுபடவில்லை. ஆனால் தமிழ் மக்களின் எதிர்காலத்தில் அர்த்தமுள்ளதும் உண்மையானதுமான மாற்றத்தைக் கொண்டு வரவும் தமிழ் மக்களின் துன்பங்கள் மற்றும் கவலைகளை நீக்கவும் ஒத்துழைப்பு என்ற உணர்வுடன் அரசாங்கத்துடன் செயற்படவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முயற்சித்திருக்கின்றது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மேற்கூறப்பட்ட உண்மையான பிரச்சினைகளை மையமாக வைத்து அரசாங்கம் தற்போதைய தேர்தல் பிரசாரத்தை நடத்தவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கடும் முயற்சிக்கு மத்தியிலும் இப்பிரச்சினைகள் குறித்து தனது செயல்பாட்டில் இன்னும் ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் அரசாங்கம் காட்டவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய பல உறுதிமொழிகளை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. இதன்காரணமாக குடும்பத் தலைவர்கள் இல்லாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் துன்பப்படுகின்றார்கள். இவ்வாறான குடும்பங்கள் தங்களின் குடும்பத் தலைவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இப்பின்னணியில், தமிழ் வாக்காளர்களின் தேர்தல் தீர்ப்பை எவ்வாறாவது திரிபுபடு;த்திக் காட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகின்றது. தமிழ் வாக்காளர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள், அச்சுறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் மீது தேவையற்ற செல்வாக்கு பயன்படுத்தப்படுகின்றது. லஞ்சம், ஊழல் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சைக்கிள்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள், சேலைகள், வேட்டிகள், பணம் மற்றும் ஏனைய பொருட்கள் அரசாங்க அரசியல்வாதிகளால் தாராளமாக வாரி வழங்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16.06.2011 அன்று அளவெட்டியில் நடத்திய முதலாவது உள்ளகக் கூட்டம் ஒன்று இராணுவத்தினரால் குழப்பப்பட்டது. மக்கள் தாக்கப்பட்டார்கள். ஒரு மாதம் கழிந்தும் அச்சம்பவம் குறித்து இன்னும் ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களினால் வீடுகள் கல்வீச்சுக்கு இலக்காகி வருகின்றன. நாய் ஒன்றின் தலையை வெட்டி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்தது. நாயின் சடலம் அவரின் வீட்டு வளவினுள் வீசப்பட்டிருந்தது. இவை அச்சநிலையை ஏற்படுத்தவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுப்பதற்குமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான கண்டனத்துக்குரிய நடவடிக்கைகள் இராணுவத்தின் பிரசன்னம் பலமாக இருக்கும் வடக்கில் இடம்பெறுகின்றது. இதற்கான பொறுப்பை அரசாங்கமும் அதன் அடிவருடிகளுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். வடக்கு மாகாண ஆளுநரிலிருந்து அரச இயந்திரம் முழுமையாக அரசாங்கத்தினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்க ஊழியர்கள் அரச விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் அல்லது எதிர் விளைவுகளுக்கு ஆளாக வேண்டும் என்று அச்சுறுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் ஆணைக்குட்பட்ட பாதுகாப்புப் படையினரும் மற்றும் ஏனைய வசதிகளும் அரசாங்கத்தின் பிரசாரத்தை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களைக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகள் குழப்பப்படுகின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களியுங்கள் அல்லது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று தமிழ் வாக்காளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மற்றும் அரசியல் கட்சிகள், ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் ஆட்களும் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறிப்பாக வடக்கில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்று சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது. தற்போது மோசமாக இருக்கும் இந்நிலைவரம் தேர்தல் தினத்தன்று மிகவும் மோசமானதாக இருக்கும். தேர்தல் நடைமுறையைக் கண்காணிப்பதற்கும் வாக்களிப்பு தினத்தன்று கண்காணிப்பதற்கும் போதுமான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வதேசக் கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இவ்விதமான செயல்பாடுகளுக்கு தடையாக இருந்திருக்கும். ஜூன் 16இல் அளவெட்டியில் இ;டம்பெற்ற பாரதூரமான சம்பவத்தின் பின்னர் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வடக்கில் அப்பட்டமாக இடம்பெறும் ஊழல் மற்றும் சட்டவிரோதமான தேர்தல் நடைமுறைகள் இடம்பெறுவது போன்று நாகரிக உலகில் வேறு எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை. எப்படியும் நேர்மையற்ற முறையிலாவது இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அரசாங்கம் நினைப்பதாகத் தெரிகின்றது. தற்போது பகிரங்கமாகியுள்ள சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபியமான சட்டங்கள் ஆகியவற்றின் மீறல்களுக்கு முகம் கொடுப்பதற்கு அவ்வாறான தேர்தல் தீர்ப்பு அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. எவ்வாறான முறையிலும் அவ்வாறான தீர்ப்பை பெறுவதைப் பொருட்படுத்தாது சாதகமான தீர்ப்பு ஒன்றை பெறுவது கட்டாய தேவை என்று அரசாங்கம் எண்ணுவது போல தெரிகின்றது. அனைவரும் கண் தெரியாதவர்கள் மற்றும் காது கேளாதவர்கள் என்று எண்ணிக் கொண்டு தங்களின் தவறுகளை மூடிமறைக்கலாம் என்று அரசாங்கம் கற்பனை செய்வதன் மூலம் மீண்டும் தவறு ஒன்றை விடுகின்றது.
இத்தேர்தலில் என்ன நடைபெறுகின்றது என்பதை முழு நாடும், உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தேர்தல் நடைபெறும் சுற்றுப்புறச்சூழல் அடிப்படையில் முக்கியமானதாகும்.
அனைத்து இன மக்கள் மற்றும் சமூகங்களுக்கும் இடையே உண்மையான நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்படுவதற்கு அரசாங்கம் நேர்மையாக சரியான நடைமுறையை ஆரம்பித்து செயல்படவேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளோம். அரசாங்கம் குறுகிய நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலை தொடருவதில் தீர்மானமாக இருப்பதாகத் தெரிகின்றது.
பாரதூரமாக ஆத்திரமூட்டப்பட்டாலும் அமைதியாக இருக்குமாறு தமிழ் மக்களை நாம் கேட்டுக்கொள்ளுகின்றோம். நீங்கள் அளிக்கும் வாக்கு உங்களின் இறைமையைப் பிரயோகிப்பதாக இருக்கும். ஜனநாயகத்தின் சாரம் அதுவே.
கொள்கையிலும் செயல்திட்டத்தினதும் அடிப்படையில் உங்கள் இறைமையை பிரயோகிக்க வேண்டும். உங்களுடைய இறைமையை இழிவான முறைகள் மூலம் வேறு எவரும் மறைமுக நோக்கங்களுக்காக தட்டிப்பறிப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது.
நீங்கள் அமைதியாக 'வீடு' சின்னத்திற்கு நேரே புள்ளடியிட்டு தெளிவான தீர்ப்பை வழங்குங்கள்.
இரா.சம்பந்தன், பா.உ.
தலைவர், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு
தலைவர், இலங்கைத்தமிழரசுக்கட்சி
18, ஜூன் 2011

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’