வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 ஜூலை, 2011

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி: கம்பளையில் இருவர் கைது

க்கிய அமெரிக்காவுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதாக கூறி மதகுரு வேடம் பூண்டு வட கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இளைஞர் யுவதிகளை ஏமாற்றி இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகிய இரு சந்தேக நபர்களை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கம்பளை பிரதம நீதவான் உபாலி குணவர்தன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்விருவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஹட்டன், கம்பளை மற்றும் சிலாபம் முதலான பகுதிகளுக்கு காலத்திற்கு காலம் சென்று இளைஞர் யுவதிகளை ஏமாற்றி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் தமது முகவர்களை பிரதேசங்களில் நியமித்து பணத்தை அறவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’