வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜூலை, 2011

'இலங்கை மீது தடைவிதித்தால், அமெரிக்க ஜனநாயக கொள்கைக்கு அது முரணானது'

லங்கையின் உள் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் அமெரிக்காவினால் முன்மொழியப்படும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை அரசாங்கம் இன்று கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போதான ரத்தக்களறிகள் தொடர்பாக பொறுப்புடைமையை வெளிப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவிகளை தடைசெய்யப்பட வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கருத்து கேட்டபோது, அமெரிக்கா இத்தகைய தடையை கொண்டுவந்தால், அது அவர்கள் போதிக்கும் ஜனநாயக கொள்கைகளுக்கு முரணானது. அதன்பின் பொறுப்புடைமை குறித்து ஒருதலைப்பட்சமாக ஆராய வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
பொறுப்புடைமை குறித்து போதுமானளவு உள்ளூர் மன்றங்களில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’