வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜூலை, 2011

மிகுதிக்காசு கேட்ட பெண் பயணியின் முகத்தில் துப்பிய பஸ் நடத்துனர்

Fபஸ் நடத்துனரிடம் மிகுதிக்காசு கேட்டபோது, அவர் தனது முகத்தில் துப்பியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பெண் பயணியொருவர் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.


தங்காலை- கொழும்பு பஸ்ஸில் தான் பயணம் செய்தபோது தனக்குரிய மிகுதிக்காசை கொடுக்க மறுத்த நடத்துனர் தகாத வார்;த்தைகளால் திட்டியதாக அப்பெண் தெரிவித்தார்.

'அவர் எனக்கு 5 ரூபா கொடுக்கவேண்டியிருந்தது. ஆனால் 2 ரூபாவையே கொடுத்தார். மிகுதிக்காசை நான் நினைவூட்டியபோது அவர் சத்தமிட்டு, நான் வேறு பஸ்ஸில் போக வேண்டும் என்றார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது மிகுதிக்காசை வைத்துக்கொள்ளுமாறு அவரிடம் கூறினேன். அவர் கோமடைந்து எனது முகத்தில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டினார். அதைப்பார்த்து பஸ் சாரதி சிரிக்க ஆரம்பித்தார்' என அப்பெண் தெரிவித்தார்.
'பஸ் என்னை கடந்தபோது, முகத்தில் எச்சில் வடிந்த நிலையில் நான் அதிர்ந்து போனேன். அருகிலிருந்தவர்கள் எனது உதவிக்கு வந்தனர்.
பயணிகளை இவ்வாறு தொந்தரவுக்குள்ளாகும் பஸ் நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் எதிராக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக தேசிய போக்குவரத்துஆணைக்குழு பணிப்பாளர் சந்திரசிறி வீரசேகரவிடம் கேட்டபோது, மாதாந்தம் இத்தகைய 2000 முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பஸ் ஊழியர்களுக்கு நடத்தை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கிவருவதாகவும் அவர் கூறினார். இதுவரை 9000 ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், இப்பயிற்சிகள் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கே வழங்கப்படுவதாகவும் மாகாணத்திற்குள்ளான பஸ் சேவைகள் அந்தந்த மாகாண சபைகளின் கீழ் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’