
இச்சூறாவளிப் பிரசாரத்தில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
தொண்டமனாறு சந்தியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பவனியாகச் சென்ற அமைச்சர் அவர்கள் பிரதான வீதியூடாக ஆதிகோவிலடியைச் சென்றடைந்தார்.
இதனிடையே மக்களது கோரிக்கைகளில் குடிநீர் மின்சாரம் காணியில்லாப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக மக்கள் அமைச்சர் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இவ்விடயம் தொடர்பில் தாம் மிகுந்த கவனம் எடுப்பதாகவும் அதன் பிரகாரம் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்.
இச் சைக்கிள் பவனியில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’