வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜூலை, 2011

நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்; இருவர் பலி, பலர் காயம்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சற்றுமுன் இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டிடங்கள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவத்தினால் குறைந்தபட்சம் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு முதலாவது குண்டு வெடித்தது.
இச்சம்பவத்தினால் எனினும் பிரதமர் அலுவலகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நோர்வேயின் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான "எஸ்.வி"யின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டிடமொன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’