"1996 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பணமும் அதிகாரமும் வந்தன. அணியிலுள்ள வீரர்கள், சபையின் அதிகாரப் போட்டியில் சம்பந்தப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் சபையின் அரசியலானது அணிக்குள்ளும் பரவி பிளவையும் தப்பபிப்பிராயங்களையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது" இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்து நாடுகளிலும் தேசிய கிரிக்கெட் சபைகளுக்கான நிர்வாகிகள் அரசியல் தலையீடின்றி தெரிவுசெய்யப்பட வேண்டும் என்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் பணிப்புரையை இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான குமார் சங்கக்கார வரவேற்றுள்ளார்.
நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்து சில நாட்களில் சங்கக்காரவின் கருத்து வெளிவந்துள்ளது.
லோர்ட்ஸ் அரங்கில், நேற்று திங்கட்கிழமை தான் நிகழ்த்திய, எம்.சி.சி. கொலின் கௌட்ரி ஞாபாகர்த்த எம்.சொற்பொழிவில் மேற்படி கருத்தை சங்கக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக அணியினரால் உயர்ந்த மதிப்பளித்து போற்றப்படும் ஐக்கியம், வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகிய பண்புகளை நிர்வாகிகளும் கடைபிடிக்க வேண்டும் என குமார் சங்கக்கார கூறினார்.
இங்கிலாந்துடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி பெற்றதற்கு மறுநாள் சங்கக்கார இந்த உரையை நிகழ்த்தினார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கொலின் கௌட்ரியின் ஞாபகார்த்தமாக 2001 ஆம் ஆண்டு முதல் இந்த சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு வருகிறது.
போட்டிகளில் விளையாடும் காலத்தில் இச்சொற்பொழிவை நிகழ்த்திய முதலாவது வீரர் குமார் சங்கக்கார என்பதுடன் இச்சொற்பொழியை நிகழ்த்திய ஒரேயொரு இலங்கை வீரரும் அவராவார்.
'நிர்வாகத்தில் மேலும் தொழிற்சார் தன்மையையும் முன்னோக்கிய சிந்தனையும் வெளிப்படைத் தன்மையும் இல்லாவிட்டால் பொதுமக்களின் ஆதரவை நாம் இழக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். உண்மையில் இது ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. விசுவாசமான ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வருவது அதிகரிக்கிறது. அவர்களின் ஆர்வம்தான் கிரிக்கெட்டிற்கு சக்தியளிக்கிறது. அவர்கள் கிரிக்கெட்டிலிருந்து வேறுபுறம் திரும்பினால் முழு முறைமையுமே சீர்குலைந்துவிடும்' என சங்கக்கார கூறியுள்ளார்.
அரசியல் தலையீடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள், தவறான நிர்வாகம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அங்கத்துவ நாடுகளின் சபைகளை இடைநிறுத்துவது என்ற ஐ.சி.சியின் நிலைப்பாடு இதற்கு தீர்வாக அமையலாம்.
இது அணிகளை களமிறக்கும் மற்றும் ஐ.சி.சியிடமிருந்து நிதி மற்றும் ஏனைய உதவிகளை பெறும் ஆற்றலை இல்லாமலாக்ககக் கூடும். எனினும் ஓர் இலங்கையர் என்ற வகையில் நாமே தீர்வுகளை தேடிக்கொள்ளும் நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்' என குமார் சங்கக்கார தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றமை நாட்டின் ஐக்கியத்திற்கான மிகப் பெரிய தருணம் என சங்கக்கார கூறினார்.
அதேவேளை, நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு தொண்டரினால் தலைமை தாங்கப்படும் மேன்மையான நோக்கம் கொண்ட மனிதர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து பல் மில்லியன் டொலர் நிறுவனமொன்றாக மாற்றமடைந்தது. அப்போதிருந்து அது கொந்தளிப்பான நிலையிலுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
"1996 ஆம் ஆண்டின் வெற்றியுடன் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பணமும் அதிகாரமும் வந்தன. அணியிலுள்ள வீரர்கள் சபையின் அதிகாரப் போட்டியில் சம்பந்தப்பட்டனர். இந்த வழியில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் , வீரர்களின் விசுவாசத்தை தமது சொந்த இலக்குகளை அடைவதற்காக பயன்படு;த்திக்கொண்டனர். பல சந்தர்ப்பங்களில் சபையின் அரசியலானது அணிக்குள்ளும் பரவி பிளவையும் தப்பபிப்பிராயங்களையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது" எனவும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’