த மிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.
பதினொரு குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தமிழ் நாடு அகதி முகாமிலிருந்து இலங்கை திரும்பியதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.எம்யூ.டப்ளியூ. பஸ்நாயக்க தெரிவித்தார்.
நாடு திரும்பியுள்ள இவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகாரலயம் ஆகியவற்றின் உதவியுடன் சொந்த பிரதேசங்களில் மீளகுடியேறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அகதிகள் இலங்கை வருவதற்காக விமான சீட்டினையும் விமான நிலையத்திலிருந்து சொந்த இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளையும் அரசாங்கம் ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு வாழ்விடம், உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி நலன்புரி, வாழ்வாதார வசதிகள் வழங்குவதை போன்று இவர்குக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என பஸ்நாயக்க தெரிவித்தார்.
இந்த வருட ஆரம்ப முதல் இன்று வரை சுமார் 1,000 இலங்கையை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றறும் செயற்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகாரலயம் மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய இலங்கை அகதிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகாரலயத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மிச்சேல் சவாகி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.எம்யூ.டப்ளியூ. பஸ்நாயக்க உட்பட பலர் பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’