இ லங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை காட்டுகின்ற சிங்களக் குரலுடன் கூடிய வீடியோவை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக பிபிசியின் சிங்கள சேவை கூறியுள்ளது.
'இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்'' என்னும் ஊடக உரிமைகளுக்காக உழைக்கும் குழுவே இவ்வாறு வழங்கியதாக பிபிசி சிங்கள சேவை கூறியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றினால் ஒளி பரப்பப்பட்ட தமிழ் உரையாடலுன் கூடிய புதிய கொலைக்கள காட்சியை கொண்ட வீடியோ துண்டம் போலியானது என இந்த ஊடகவியலாளர் குழு கூறியுள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS), புதிதாக கிளம்பியுள்ள இந்த வீடியோ துண்டம் 18 செப்டெம்பர் 2009 இல் அரசாங்க சார்பான ஒரு வலையமைப்பில் முதலில் காட்டப்பட்டதாக கூறியுள்ளது. இந்த அமைப்பு (JDS), சான்றுப்படுத்தலுக்காக இந்த வீடியோ துண்டத்தை ஒரு சர்வதேச ஆய்வுக்கு கொடுக்கும்படி அரசாங்கத்தை கோரியுள்ளது.
இந்த வீடியோவானது அரச படையினர் மீது தமிழ் புலிகள் மேற்கொண்ட குற்றச் செயல்களை காட்டுவதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு (JDS), சார்பில் பேசிய சனத்பாலசூரிய, அரசாங்கம் இப்போது இவ்வாறு கூறுவது, இவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லை என அரசாங்கம் முன்னர் கூறியதை செல்லுபடியற்றதாக்கிவிட்டது என பிபிசி சிங்கள சேவைக்கு கூறினார்.
அரசாங்கம் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை இந்த வீடியோ காட்டுகின்றது என கூறுமானால், உண்மையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பதை அது ஏற்றுக்கொள்கின்றது எனப் பொருள்படும் என அவர் கூறினார்.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு (JDS), இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை காட்டுகின்ற- சிங்கள ஊரையாடலையும் இதே காட்சிகளையும் கொண்ட வீடியோ துண்டத்தை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
இதே சம்பவத்துடன் மேலும் சில காட்சிகளை காட்டும் வீடியோவை, சட்டத்துக்கு புறம்பான, எழுந்தமான கொலைகளுக்கான ஐ.நா. விசேட அறிக்கையாளர் பார்வையிட்டுள்ளதுடன் இந்த சம்பவம் உண்மையானதே எனவும் கருத்துக் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ தமிழ் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை காட்டுகின்றதென கூறுகின்ற அரசாங்கம் தமிழ் உரையாடலுடன் கூடிய காட்சிகளின் தொடர்ச்சியையும் வழங்க வேண்டுமென (JDS) பேச்சாளர் பால சூரிய சவால் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’