வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 ஜூலை, 2011

சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தீர்மானம்

ந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இத்தகைய நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது எனவும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு இந்தியா அனுப்பும் எனவும் கூறியுள்ளார்.

"இது இப்படியே தொடர முடியாது. இலங்கை அரசாங்கத்துடன் உறுதியான புரிந்துணர்வுக்கு நாம் வரவேண்டும் என எண்ணுகிறேன்" என இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
14 இந்திய மீனவர்களை கைதுசெய்ததாக வெளியான குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரித்ததாக செய்தி வெளியான பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்குச் சென்று இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறாதிருப்பதற்கான களத்தை தயார்படுத்துவதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஒருவரை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’