வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 ஜூலை, 2011

பிரெட்ரிகா துன்பமான நிலையில் பொன்சேகாவுடன் உரையாடுவதைக் கண்டேன்

ண்டே லீடர் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியானதற்கு அடுத்த நாள், அப்பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் துன்பமடைந்த நிலையில் உரையாடிக்கொண்டிருப்பதை தான் கண்டதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கின் ட்ரையல் அட் பார் விசாரணை நேற்று நடைபெற்றபோதே கரு ஜயசூரிய இவ்வாறு சாட்சியமளித்தார். எனினும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தனக்கு கேட்கவில்லை என கரு ஜயசூரிய கூறினார்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரல் புவனேக அலுவிஹாரவின் குறுக்கு விசாரணையின்போது, 'கோட்டா அவர்களை சுட உத்தரவிட்டார்' என்ற ஆக்கம் தொடர்பாக எந்த விளக்கத்தையும் தான் அளிக்க முற்படவில்லை எனவும் அத்தகைய விடயங்களைக் கையாள்வதற்கு மங்கள சமரவீர உட்பட பலர் இருந்ததாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது, விளம்பரத்திற்காக சண்டே லீடர் பத்திரிகைக்கு 4 மில்லியன் ரூபாவை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியதாகவும் அவர் கூறினார். அத்தகைய தொகையை வேறு பத்திரகைகளுக்கு ஐ.தே.க. வழங்கியதா என்பது தனக்குத் தெரியாது எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’