வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 ஜூலை, 2011

இவ்வருடத்திற்குள் சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை இழுக்கப்படலாம் : மங்கள

யு த்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வருட இறுதிக்குள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் பரிகசிப்புக்கிடமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மங்கள சமரவீர எம்.பி. கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் கையெழுத்திடாததன் காரணமாகவே அரசாங்கம் இதுவரை பாதுகாப்பானதாக இருக்கிறது. இதனால் அவருக்கு அரசாங்கம் நன்றியுடையதாக இருக்க வேண்டும் என மங்கள சமரவீர கூறினார்.
அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாத போதிலும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சிபாரிசின் மூலம் அந்நீதிமன்றதிற்கு இலங்கை இழுக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’