பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று புதன்கிழமை தெரிவித்தது.
இலங்கை வரும் லியம் பொக்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ். மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடனும் பேச்சுநடத்தவுள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு நிகழ்வில் லியாம் பொக்ஸ் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் பேர் குற்றம் புரிந்ததாக பிரிட்டன் சனல் - 4 அலைவரிசையினால் வீடியோ காட்சிகள் வெளியீடப்பட்டுள்ள நிலையிலேயே இவரின் இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட இறுதியில் இவர் கொழும்பு வரவிருந்தார். எனினும் இறுதி நேரத்தில் இவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’