இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார்
இதற்கிடையே, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க மீண்டும் தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரமே இந்த தேர்தல் வெற்றியென தமிழோசையிடம் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது எனவும் கடுந்தொனியில் அவர் பேசியிருக்கிறார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் திறனாய்வு பற்றி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
‘நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக வடக்கு உட்பட நாடு முழுவதும் 56 வீதமான மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி கூறியுள்ளது.
முகத்தில் ஆவேசம் பொங்க, நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்புக்கு எதிராக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கேட்டுக் கொண்டு வரவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பெயர்களைக் கூறியபடி எச்சரிக்கை தொனியில் பேசினார் சம்பிக்க ரணவக்க.
‘பிரபாகரன் ஊடாக சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தவர்கள் இன்று அமெரிக்கா ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் சாத்தியமாகாது’ என்றும் பேசியுள்ளார் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க.
'தமிழர்களின் அங்கீகாரம்'- தமிழ் கூட்டமைப்பு
ஆர். சம்பந்தன் |
சர்வதேச சமூகத்தின் கோரிக்கையின் படி, அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே இன்றுள்ள தேவை என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரத்தை ஊதாசீனம் செய்யக்கூடாது எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’