வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூலை, 2011

வீரவங்சவை கடுவலையிலிருந்து விரட்டியடிப்பதே அடுத்த கட்ட நடவடிக்கை: புத்ததாஸ

திகாரங்களை துஷ்பிரயோகம் செய்து வன்முறைகளுக்கு வித்திட்ட அமைச்சர் விமல் வீரவங்சவை கடுவலையில் இருந்து விரட்டியடிப்பதே தனது அடுத்த கட்டப் போராட்டம் என்று கடுவலை மாநகர சபைக்காக போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டிய ஜி.எச். புத்ததாஸ சூளுரைத்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவங்சவின் யுகம் மலையேறிவிட்டது. தற்போது புத்ததாஸவின் யுகம். முடியுமானால் தன்னோடு நேரடியாக மோதுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் போது கடுவலை மாநகர சபைக்காகப் போட்டியிட்ட புத்ததாஸ 29 ஆயிரத்து 719 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நேற்றைய தினம் அத்துருகிரியவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அமைச்சர் விமல் வீரவங்ச தனது அதிகாரங்களையும் விசேட அதிரடிப்படை கொண்ட பாதுகாப்பு அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு கடுவலை பிரதேசத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளை, என்னைத் தோற்கடிப்பதற்கு பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், கடுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களை தன்வசப்படுத்திக் கொண்ட அவர் எனக்கு எதிரான சதிமுயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். எனினும், தற்போது நான் அதிகப்படியான வாக்குகளõல் வெற்றிபெற்றிருக்கிறேன்.
வீரவங்சவின் காலம் மலையேறிவிட்டது. தற்போது புத்ததாசஸவின் யுகமே நடந்துகொண்டிருக்கிறது. எனது அடுத்த கட்ட போராட்டம் விமல் வீரவங்சவை கடுவலையிலிருந்து விரட்டியடிப்பதேயாகும். முடியுமானால் அமைச்சராக இருக்கும் அவர் என்னோடு மோதிப்பார்க்கட்டும் அதற்கும் நான் தயாராவே இருக்கிறேன் என்றார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’