வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜூலை, 2011

புதிய உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சிகள்

டந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல்களில் தெரிவான 65 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


உள்ளூராட்சிமன்ற சட்டங்கள், நடைமுறைகள், கேள்விப்பத்திர நடைமுறைகள், அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளல் போன்றவை இப்பயிற்சிகளில் உள்ளடங்கும் என உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக தெரிவான உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் விசேட வர்த்தமானியொன்றின் மூலம் வெளியிடப்படவுள்ளது. அதன் பின் ஒரு மாதத்தில் புதிய உள்ளூராட்சி சபைகள் செயற்படத் தொடங்கும்.
65 உள்ளூராட்சிமன்றங்களுக்க 875 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் விபரம் வருமாறு
ஐ.ம.சு.மு. -512, த.தே.கூ. -183, ஐ.தே.க. -137, ஜே.வி.பி. -13, த.வி.கூ -12, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -07, பிரஜைகள் முன்னணி -02, லங்கா சமசமாஜ கட்சி -01, சுயேட்சைக்குழு -08 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’