வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 மே, 2011

'நிபுணர்குழு பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும்'

லங்கைப் போர் நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூறல் குறித்த ஐநா செயலரின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

''இலங்கையின் உள்ளூர் புலன்விசாரணைகளை கண்காணிக்க ஒரு சர்வதேச கட்டமைப்பு தேவை மற்றும் தேவையான நடவடிக்கைகளை அந்த சர்வதேச கட்டமைப்பே மேற்கொள்ளலாம்'' என்ற பரிந்துரையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் திங்களன்று ஆரம்பமான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளாலும், இலங்கை அரசாங்கப் படைகளாலும் சர்வதேச சட்டங்கள் பரந்துபட்ட அளவில் கடுமையாக மீறப்பட்டதாக முடிவு செய்வதற்கு நம்பகத்தன்மையுடனான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தலைமைச் செயலரின் நிபுணர் குழு அறிக்கை கூறுவதை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன். அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு நானும் கேட்டுக்கொள்கிறேன்'' என்றும் அவர் குறிப்பிட்டார்
இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க
இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க
''ஐநா நிபுணர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய தகவல்களை ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு எதிரொலிக்க வேண்டும் என்றும் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், ஐநா நிபுணர் குழுவில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அங்கு பேசிய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அங்கு தெரிவித்தார்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்குழு அறிக்கை கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை முற்றிலும் தேவையற்றது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கம் அங்கு தேசிய நல்லிணக்கத்துக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவை படிப்படியாக பலன் தந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இலங்கை போர் குறித்த ஐநா செயலரின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக வேறுபல நாடுகளும் அங்கு பேசியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ''நிபுணர் குழுவின் அறிக்கையை'' வரவேற்றதுடன், அதன் பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், இலங்கை விவகாரத்தை ஐநா மனித உரிமைக் கவுன்சில் மீண்டும் எடுத்திருப்பது ஐநாவின் இரட்டைப் போக்கைக் காண்பிப்பததாக கியூபாவின் பிரதிநிதியான றோடொல்ஃப் ரீயிஸ் றொட்ரிகஸ் பேசினார். வளரும் நாடுகளை உலக சக்திமிக்க நாடுகள் அடக்கப் பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் தமது உள்ளூர் விடயங்களை தாமே கையாளும் வல்லமை உள்ளவர்கள் என்று கூறிய சீனாவின் பிரதிநிதி, அதற்கு ஐநா தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’