வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 மே, 2011

82 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை அணி ; இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி

லங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 82 ஓட்டங்களால் சுருண்டதால் இங்கிலாந்து அணி இந்த எதிர்பாராத வெற்றியை பெற்றுமை குறிப்பிடத்தக்கது.

கர்டிவ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 400 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நான்காவது நாளான நேற்று 5 விக்கெட் இழப்பிற்கு 491 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் கடைசி நாளான இன்று அவ்வணி 5 விக்கெட் 496 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அப்போது 96 ஓட்டங்கள் மாத்திரமே இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸ் மாத்திரமே விளையாடியிருந்தன. இன்று முற்பகலும் மழை பெய்ததால் இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என்றே கருதப்பட்டது.
ஆனால் கிறிஸ் ட்ரம்லெட் மற்றும் கிறேம் ஸ்வான் ஆகியோரின்; பந்துவீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வேகமா சரியத் தொடங்கின. 24.2 ஓவர்களில் 82 ஓட்டங்களுடன் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
கிறேம் ஸ்வான் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ட்ரம்லெட் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
3 போட்டிகள் கொண்ட இத் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’