வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 மே, 2011

வடபகுதியின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்த வேண்டும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

யு த்தத்தின் பாதிப்புக்களை முழுமையாக சுமந்த வடக்கு பிரதேசம் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் அபிவிருத்தி அடைந்து வருகின்ற போதிலும் அப்பிரதேசத்தின் விரைவானதும் நிறைவானதும் அபிவிருத்திக்கு வங்கித்துறையினர் தனியார் துறையினர் உள்ளிட்ட அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (29) காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு மற்றும் இலகு கடன்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தத்திற்கு பின்னரான இந்த சூழலில் எமது பிரதேசம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இந்த நிலையில் மக்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொள்வதற்கும் தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக முற்றாக அழிந்த மாவட்டங்களிலும் மீள்குடியேற்றப்பட்ட பகுதியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இன்று இம்மக்களுக்கு இலகு கடன்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இம்மாவட்ட மக்கள் சார்பாக அமைச்சுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மக்களின் அழிந்து போன வாழ்விடங்களை கட்டியெழுப்புவதற்கு நாம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஏற்கனவே மீள்குடியேறிய பகுதி மக்களுக்கு அவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன வழங்கப்பட்டு வருகின்றன. இன்று இங்கு வழங்கப்படுகின்ற இவ்வுதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். அத்தோடு பெரும் எண்ணிக்கையானோருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் சார்பாக நான் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் முன்வைக்கின்றேன்.

எமது மக்கள் அரச வங்கிகளிடமிருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதில் பொறுப்புணர்வுடன் செயற்படுபவர்கள். இந்த நாட்டில் இப்பிரதேச மக்கள் தாம் பெற்ற கடன்களை முழுமையாக திருப்பி செலுத்துகின்றனர். இது வங்கிகளின் அறிக்கையினூடாக நிரூபணமாகியுள்ளது. எனவே எமது மக்கள் அனைவருமே கடனை மீளச்செலுத்துவதில் நம்பிக்கையுடன் செயற்படுபவர்கள்.

எனவே எமது மக்களை நம்பி வங்கித்துறையினர் கடனை வழங்கலாம். அத்தோடு வங்கியினர் கடன் வழங்குவதற்காக கடைப்பிடிக்கும் இறுக்கமான நடைமுறையினை தளர்த்தி தேவையுடைய அனைவருக்குமே இலகுவாக கடனைப்பெற வழிவகுக்க வேண்டும். இதனூடாக எமது மக்களின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் உதவ முன்வர வேண்டுமென அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரச்சினைகளை அணுகுவதில் மிகவும் கரிசனை கொண்டவர். இதனூடாக புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுவிப்பதில் மிகவும் அக்கறை காட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அதிதீவிர செயற்பாட்டின் ஊடாக இதுவரை பெரும்பாலான முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். எஞ்சியிருக்கும் முன்னாள் போராளிகளும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்விடயத்தில் அரசும் அதிக அக்கறை காட்டி வருகின்றதென்பதும் இங்கு குறிப்பிடத்த்ககது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சரணடைந்த போது அவர்களின் விடுதலைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் அதுவும் கேள்விக்குரியானது என்றெல்லாம் பிரச்சாரப்படுத்தப்பட்டது. ஆனால் ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரும் மற்றும் ஏனையோரும் எடுத்த கூட்டு முயற்சியின் காரணமாக இவர்களின் விடுதலை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவர்களையும் இந்த சமூகத்தில் இணைத்து இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்வதில் அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முன்னாள் போராளிகள் ஏற்கனவே புனர்வாழ்வு நிலையங்களில் பல்வேறு தொழில்துறைகளை கற்றுள்ளார்கள். அதனடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களினதும் பிரதேசத்தினதும் அபிவிருத்தியில் விசேட கவனம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி புனர்வாழ்வு சபையின் தலைவர் சமரசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார். அமைச்சின் செயலாளர் திஸநாயக்க அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ்குமார் உட்பட உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’