வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 மே, 2011

மேற்கு வங்க முதல்வரானார் மமதா

ந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் 34 ஆண்டுகால தொடர் ஆட்சிக்கு முடிவு கட்டிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
ஆளுநர் எம்.கே. நாராயணன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன், திரிணாமூல் காங்கிரஸின் 35 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார்கள்.
ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், தனது தாய் மொழியான வங்க மொழியில் அவர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
திரிணாமூல் காங்கிரஸின் சட்டப்பேரவைக் கட்சி துணைத் தலைவர் பார்தா சாட்டர்ஜி, இந்திய வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், மமதா அமைச்சரவையில் நிதியமைச்சராக இடம்பெறக்கூடியவராகக் கருதப்படுபவருமான அமித் மித்ரா, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மனானஸ் புனியா, மத்தியப் புலனாய்வுத்துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் உபேன் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பதவியேற்ற மமதா அமைச்சரவையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி ஆகியோரும், பதவியிழந்த மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றார்கள்.
பதவியேற்பு விழா முடிந்ததும், மக்கள் கூட்டத்துக்கு நடுவே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள ரைட்டர்ஸ் பில்டிங் கட்டடத்துக்கு மமதா பானர்ஜி நடந்து சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, டாடா நிறுவனத்தினர் மீண்டும் தொழில் தொடங்க வரலாம் என்று அழைப்பு விடு்த்தார்.
அதாவது, சிங்கூரில் டாடாவின் குறைந்த விலை காரான நேனோ கார்களைத் தயாரிக்க ஆலை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் இடதுசாரி ஆட்சிக்காலத்தில் கையகப்படுத்தப்பட்டது. விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து மமதா நடத்திய போராட்டத்தால் டாடாவின் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அந்த ஆலை குஜராத்துக்குச் சென்றது.
தற்போது, அந்த ஆயிரம் ஏக்கரில் விளை நிலமாக உள்ள 400 ஏக்கர் விவசாயிகளுக்குத் திருப்பி வழங்கப்படும் என்றும், மீதியுள்ள 600 ஏக்கரில் டாடா தொழில் துவங்கலாம் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’