வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 மே, 2011

பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும்: ஜே.வி.பி.

லங்கையின் உள்விவகாரங்களில் 'சர்வதேச சக்திகள்' தலையிடுவதை தடுப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி இன்று தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றும் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டபோதிலும், சில நவகாலணித்துவ சக்திகள் நாட்டை பிரிப்பதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனவென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா டெய்லிமிரருக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.
யுத்தத்திற்கு பின்னரான சூழலில் தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிப்பது அவசியமானது. இடம்பெயர்ந்த மக்களை சகல வசதிகளுடனும் மீளக்குடியமர்த்துவதும் இந்த பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய விடயங்கள் உள்ளன.
அவசரகால சட்டத்தை நீக்கும்படி இந்திய, இலங்கையை கேட்கக்கூடிய நிலைமை காணப்படும்போது, அதை முறியடிப்பதற்கு அரசாங்கம் தானாகவே அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிடுவது நல்லதென ரில்வின் சில்வா தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’