வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 மே, 2011

ஜே 245 கிராம சேவையாளர் பிரிவு மீள்குடியேற்றத்திற்குத் தயார்!

சாவிளான் ஜே. 245 கிராம அலுவலர் பிரிவில் மக்கள் விரைவில் மீளக் குடியமர்வதற்கான நடவடிக்கையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துரிதப்படுத்தியுள்ளார்
. இதன்பிரகாரம் இப்பகுதி மக்கள் இன்னும் சில தினங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.
அண்மையில் வசாவிளான் பகுதிக்குச் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்பகுதி மக்கள் தங்களது மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள மேற்படி பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அந்நடவடிக்கைகளை அமைச்சர் அவர்கள் துரிதப்படுத்தியுள்ளார்.
இதன் பிரகாரம் தற்போது அப்பகுதியில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கான சான்றிதழை வெகுவிரைவில் வழங்கும்படி அமைச்சர் அவர்கள் பணித்துள்ளார்.
இந்நிலையில் ஜே 245 கிராம அலுவலர் பிரிவில் மிக விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’