வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 மே, 2011

விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு நோர்வே எதிர்கட்சியினர் கோரிகை

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது நோர்வேயில் கட்டாயம் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க் கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வலியுறுத்தி உள்ளது. கொன்சர்வேர்ட்டிவ் கட்சியில் பாதுகாப்பு விவகாரங்கள் குழுவுக்கு பொறுப்பாக இருக்கும் பீற்றர் கிற்மார்க் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.


இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு: ஐரோப்பிய ஒன்றியத்தை நோர்வே பின்பற்றி புலிகள் இயக்கம் மீது கட்டாயம் தடை கொண்டு வர வேண்டும். நெடியவனை விசாரிக்க நெதர்லாந்து நாட்டின் புலனாய்வுக் குழு ஒன்று நோர்வே வந்து உள்ளது.
நோர்வேயில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறுகின்றமைக்காக நோர்வே பொலிஸாரும் இவரை விசாரிப்பார்கள் என்று நம்புகின்றேன்.
இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட பிரதான தரப்பைச் சேர்ந்தவர்களில் புலிகளுடம் அடங்குகின்றனர். இலங்கை அரசு, புலிகள் ஆகியோரின் செயல்பாடுகள் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையில் வன்மையாக கண்டிக்கப்பட்டு உள்ளன. நோர்வேயில் புலிகள் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்து உள்ளன.
இப்பணம் இலங்கை மக்களின் நன்மைக்காக சேகரிக்கப்படவில்லை என்றும் இலங்கையில் யுத்தம் ஒன்றை நடத்துகின்றமைக்காகவே சேகரிக்கப்படுகின்றது என்றும் நான் நினைக்கின்றேன். நோர்வே பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’