நா ட்டில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் பேர் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எதனை அடிப்படையாகக்கொண்டு கூறியுள்ளது என்று தெரியவில்லை.
ஆனால் அதியுயர் பாதுகாப்பு வலய விவகாரம் காரணமாக சுமார் 40 ஆயிரம் பேரும் வவுனியா முகாம்களில் 16 ஆயிரம் பேருமே மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.
நாட்டில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் பேர் இன்னும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது யுத்தம் முடிவடைந்தபோது வவுனியா முகாம்களில் சுமார் மூன்று இலட்சம் அகதி மக்கள் காணப்பட்டனர்.
இந்நிலையில் அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை விரைவான முறையில் மீள்குடியேற்றும் திட்டத்தை மேற்கொண்டது. அந்த வகையில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சான்றிதழ் கிடைத்தவுடன் நாங்கள் மக்களை மீள்குடியேற்றிவருகின்றோம். தற்போதைய நிலைமையில் வவுனியா முகாம்களில் 16 ஆயிரம் மக்களே இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ளனர். அதாவது சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் என்று கூறலாம்.
அந்த மக்களையும் மிக விரைவாக மீள்குடியேற்றவேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். தற்போது நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மீதமுள்ள அனைத்து மக்களையும் மீள்குடியேற்றிவிடுவோம்.
எஞ்சியுள்ள மக்களை மிக விரைவில் மீள்குடியேற்ற வேண்டும் என்பதே எமது விருப்பமாகவும் உள்ளது. ஆனால் நிலக்கண்ணிவெடிகளே அதற்கு தடையாகவுள்ளன. அந்த வகையில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மக்களை மீள்குடியேற்றுவோம்.
இதேவேளை அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சுமார் 40 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது படிப்படியாக பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில் மக்களும் மீள்குடியேற்றப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் பேர் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எதனை அடிப்படையாகக்கொண்டு கூறியுள்து என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் இந்தத் தொகை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’